வாஷிங்டன்: சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடந்தது. இதில் அழைப்பு நாடாக உள்ள அஜர்பைஜானும் கலந்துகொண்டது. அந்த நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில்,’
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினர் பதவியை பெற அஜர்பைஜான் செய்து வந்த முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தி விட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. இருந்தபோதிலும் பாகிஸ்தானுடனான சகோதரத்துவத்திற்கு எங்கள் நாடு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். இதன் மூலம் இந்தியா பன்முக ராஜதந்திர கொள்கைகளை மீறி விட்டது. ’ என்றார்.