Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் சிறுவர்களிடையே பித்தப்பை கற்கள் பாதிப்பு அதிகரிப்பு: டாக்டர்கள் கவலை

புதுடெல்லி: ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு ஏற்படும் நோயான பித்தப்பை கற்கள் சிறுவர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பித்தப்பை கற்கள் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் நிறைய பேர் வருகின்றனர் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்களை பாதிக்கும் என கருதப்படும் பித்தப்பை கற்கள் இப்போது ஆறு வயது சிறுவர்களிடமும் காணப்படுகிறது என மருத்துவ வல்லுனர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் தங்கள் கவலையை வெளியிட்டனர். பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் உருவாகும் திடமான படிவுகள் ஆகும். அவை பெரும்பாலும் கொழுப்பு அல்லது பிலிரூபினால் ஆனவை. பல சந்தர்ப்பங்களில் அறிகுறியற்றதாக இருந்தாலும், அவை பித்த ஓட்டத்தைத் தடுக்கும்போது கடுமையான வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக நகர்ப்புற மையங்களில், சிறுவர்களில் பித்தப்பைக் கல் நோய் அதிகரிப்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம், என்று குருகிராமில் உள்ள மெட்னாட்டா-தி மெடிசிட்டியின் குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை சிறுநீரகவியல் இயக்குநர் டாக்டர் ஷந்தீப் குமார் சின்ஹா ​​கூறினார்.சிறு வயதிலேயே பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு காரணங்களில் சிறுவர்களின் உணவு பழக்கம், உடல் பருமனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் பரம்பரை பரம்பரையாக இந்த பாதிப்பு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.