கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அணி
30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 159 ரன்களும் இந்தியா 189 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. 124 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 93 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணியில் சிமோன் ஹர்மேர் 4, கேசவ் மஹாரரஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்


