Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய சாதனை.. இந்தியாவில் கிரெடிட் கார்டு புழக்கம்: 5 ஆண்டுகளில் ரூ 2.2 லட்சம் கோடி வரை உயர்வு!!

டெல்லி: இந்தியாவின் நிதித்துறையில் ஒரு புதிய சாதனை. 2025 செப்டம்பர் மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் ரூ.2.2லட்சம் கோடியை தொட்டுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான அளவாகும். CareEdge Ratings வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியர்களின் கிரெடிட் கார்டு செலவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23% அதிகரித்துள்ளன. செப்டம்பர் 2025ல் மட்டும் மொத்தம் கிரெடிட் கார்டு பயன்பாடு ரூ.2.17 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2020க்கு பிறகு இதுவே மிக உயர்ந்த நிலை.

இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் விழா கால சலுகைகள், நுகர்வோரின் அதிகரித்த தேவைகள் மேலும், ஜி.எஸ்.டி. விகிதத்தில் ஏற்பட்ட குறைப்புகள் என நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கிகள் இந்த காலத்தில் பல சிறப்பு சலுகைகளை வழங்கியதால் கடன் அட்டைகள் மூலமான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பான விஷயம், தனியார் வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுசந்தையை 74.2 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கின்றன. அதாவது இந்தியாவில் நடக்கும் 4 கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 3 பரிவர்த்தனைகள் தனியார் வங்கிகளின் வழியாக தான் நடக்கிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, இந்த வளர்ச்சி இந்தியர்களின் டிஜிட்டல் செலவு பழக்கங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறது. கடன் அட்டைகள் இனி அவசர நிலைகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி செலவுகளுக்கான முக்கிய கருவியாக மாறிவிட்டன என நிபுணர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில் 2025 செப்டம்பர் மாதம் இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் வங்கிகளின் சலுகைகள் மற்றும் நிதி ஒழுங்கு முறைமைகளின் நவீன மாற்றங்கள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் கிரெடிட் கார்டு சந்தைக்கு ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வளர்ச்சி மேலும் தொடருமா? அல்லது விழாக்காலங்களில் தாக்கம் குறைந்ததும் மீண்டும் சரியுமா? என்பதை பார்க்க வேண்டும்.