இந்தியா,சீனாவுக்கு எதிராக காலனித்துவ கால உத்திகளை பயன்படுத்துவதா..? டிரம்புக்கு அதிபர் புடின் கண்டனம்
பீஜிங்:இந்தியா,சீனா நாடுகளுக்கு எதிராக காலனித்துவ காலத்தில் பயன்படுத்திய உத்திகளை பயன்படுத்துவதற்கு அதிபர் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்,சீன தலைநகர் பீஜிங்கில் வெற்றி விழா ராணுவ அணிவகுப்பு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் புடின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா, சீனா ஆகியவை சக்திவாய்ந்த பொருளாதாரங்களை கொண்ட நாடுகள். அதிக மக்கள்தொகை கொண்ட இந்த நாடுகள். இரு நாடுகளுக்கு எதிராக காலனித்துவ கால உத்திகளை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. நட்பு நாடுகளிடம் இவ்வாறு செயல்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.