டெல்லி: இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளதாக குறும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மும்பையில் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும். டெல்லியில் 80 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. டெல்லியில் உள்ள பணக்காரர்களில் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் சிவ் நாடார் HCL ரூ.2.62 லட்சம் கோடி சொத்துடன் முதல் இடத்தில் உள்ளதாகவும்.
ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் ரூ.2.55 லட்சம் கோடி சொத்துடன் 2ம் இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொழிலதிபர் ரவி ஜெய்பூரியா ரூ.1.32 லட்சம் கோடி சொத்துடன் 3வது இடத்தில உள்ளார். ராயல் என் பீல்ட் பைக்குகளை தயாரிக்கும் ஐசேர் மோட்டார் நிறுவனத்தின் விக்ரம் லால் குடும்பத்தினர் ரூ.92,000கோடி சொத்துடன் 4ம் இடத்தில் உள்ளனர். டாபர் நிறுவனத்தை நிர்வகிக்கும் பர்மன் குடும்பம் ரூ.86,320 கோடி சொத்துடன் 5வது இடத்தில் உள்ளது.