புதுடெல்லி: கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பூடான் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையே 2 எல்லை தாண்டிய ரயில் வழித்தடங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இத்திட்டம் குறித்த விவரங்களை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இருவரும் டெல்லியில் நேற்று வெளியிட்டனர். மேற்கு வங்க மாநிலம் பனார்ஹட்டை பூடானின் சாம்ட்சேவுடனும், அசாமின் கோக்ரஜரை பூடானின் கெலேபுவுடனும் இணைக்கும் வகையில் 89 கிமீ நீளமுள்ள 2 எல்லை தாண்டிய ரயில் இணைப்புகள் செயல்படுத்தப்படும்.
+
Advertisement