Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற விருது பெற்ற மாநகர போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற விருது பெற்ற மாநகர போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறை தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மெருகேறி வருவதாக முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் சமூக வலைதள பதிவில்:

ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரம் அதன் பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தில் பிரதிபலிக்கிறது.

இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்க்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள்.

கடைசி மையில் இணைப்பு, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.