பஞ்சாப்: 79வது சுதந்திர தினத்தை ஒட்டி பஞ்சாப் வாகா எல்லையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான பார்வையாளர்கள் வாகா எல்லையில் குவிந்துள்ளனர். 1959ம் ஆண்டு முதல் வாகா எல்லையில் பாதுகாப்பு படையின் கொடியிறக்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்களின் பைக் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகமடைந்தனர்.
+
Advertisement