வலங்கைமான் : குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2023- 24ம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியில் முன்னாள் மாணவர் சாமிநாதனின்தனியார் அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுந்தரி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையினை வழங்கி பாராட்டினர்.
முதுகலை ஆசிரியர் சண்முகம் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர்உமாநாத் உடற்கல்வி ஆசிரியர் ராம்பிகா ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.