திருவண்ணாமலையில் விடிய விடிய போர்னமி கிரிவலம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவித்தனர்
திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற தலமாக இருக்க கூடிய திருவண்ணாமலை நேற்று அதிகாலை சராசரியாக 2:38 மணிக்கு அணி மாத பௌர்ணமி ஆனது இருந்தது அதை தொடர்ந்து பக்தர்கள் நேற்று இரவு விடிய விடிய தொடர்ந்து கிரிவலபாதையில் 15கிலோமீட்டர் தொடர்த்து கிரிவலம் மேற்கொண்டனர் .குறிப்பாக நேற்று அதிகாலை 2:38க்கு தொடக்கி இந்த பௌர்ணமி இன்று அதிகாலை 3:08 மணிக்கு நிறைவடைதது .
இருந்தபோதிலும் கூட திருவண்ணாமலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அண்ணாமலையார் திருகோயில் முழுக்க இந்த பக்தர்களின் கூட்டம் ஆனது நீண்ட வருசையால் சாமி தரிசனம் செய்ய 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனத்தை செய்து முடித்த பின்னர் பௌர்ணமி நிலவு ஒளியில் நேற்று இரவு முழுக்க 14க்கு கிலோமீட்டர் கொண்ட அந்த கிரிவலபாதையால் லட்ச்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
கிரிவல பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் குவித்த நிலையில் சராசரியாக 6:20 மணிக்கு ரமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லக்கூடிய பயனிகள் ரயில் ஆனது திருவண்ணாமலை வந்தவுடன் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டி அடித்து கொண்டு அந்த ரயிலில் ஏறினார்கள். குறிப்பாக இந்த ரயிலில் பயனித்தவர்கள் நடைமேடைக்கு இறங்குவதற்கு முன்பாகவே ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள் ஏறும் சுழல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லக்கூடிய அடுத்த 2ஆவது ரயில் வந்த பிறகும் கூட இந்த பகதர்கள் இடையே தள்ளுமுள்ளு தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக இங்கே வரும் பக்தர்கள் பொதுவான கோரிக்கை என்னவென்றால் ஒன்றியஅரசு இந்த பௌர்ணமி தினங்களில் நேரத்திற்கு ஏற்றாற்போல கூடுதல் ரயில்கள் இயக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து உள்ளார்கள் .
இருந்தபோதிலும் இந்த ஒன்றிய அரசு போதுமான ரயில்களை இயக்கததால் ஒவ்வொரு சூழலிலும் இதுபோல் நிலவி கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் வந்து திருவண்ணாமலை வருவதால் பௌர்ணமி நாளில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.