Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் GROKIPEDIA: எலான் மஸ்க்

வாஷிங்டன்: விக்கிப்பீடியாவுக்கு மாற்றாக X AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள GROKIPEDIA ஆன்லைன் அறிவுத்தளம் இரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வருவதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் கட்டணமின்றி அறிய விக்கிப்பீடியா அறிவுத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தொழிலதிபர் எலான் மிஸ்கின் X AI நிறுவனம், GROKIPEDIA என்ற ஆன்லைன் அறிவுத்தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தளம் பல மாதங்களாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர X AI நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொடக்க கால பீட்டா பாதிப்பு 0.1 இரண்டு வாரங்களில் பயன்பாட்டுக்கு வருவதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். உண்மை சார்ந்த கலைக்களஞ்சியம்தான் GROKIPEDIA-வின் நோக்கம் என்றும் இதன் உள்ளடக்கத்தை AI- மூலம் சரிப்பார்கலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்கிப்பீடியாவில் எதிர்பார்க்கும் அனைத்து தகவல்களும் GROKIPEDIA- வில் கிடைக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.