இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை எடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை எடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சென்னை சாந்தோமில் பசுமை பயணம் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டை பொறுத்தவரை நாம் பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகிறோம் என தெரிவித்தார்.


