ஈரோடு: ஈரோடு அருகே அவல்பூந்துறை பாரதிநகரில் நாய்கள் கடித்துக் குதறியதில் 6 குட்டிகள் உள்பட 10 ஆடுகள் உயிரிழந்தன. உதயராஜா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் நேற்றிரவு கூட்டமாக புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறின. அவல்பூந்துறை பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் 20 நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement