அரசு நிகழ்வுகளுக்காக வரும் 7 முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை: அரசாணை வெளியீடு
சென்னை: அரசு நிகழ்வுகளுக்காக வரும் 7 முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.