புதுடெல்லி: புதிதாக கொண்டு வரப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 37 விமான நிலையங்கள், 34 துறைமுகங்கள் மற்றும் 37 நிலப்பகுதிகளில் குடியேற்ற சோதனைச்சாவடிகள் அமைக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேச எல்லைகளில் அமைந்துள்ள 6 ரயில் நிலையங்களில் குடியேற்ற சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களும், சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களும் குடியேற்ற சோதனைச்சாவடி மையங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
+
Advertisement