*திருப்பதி கலெக்டர் அறிவுரை
திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் மனுதாரர்களுக்கு நாற்காலிகள் குடிநீர் வசதிகள், தேநீர், மருத்துவ முகாம் மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர், பொதுமக்களின் பிரச்னைகளை விசாரித்து, அவர்களிடம் இருந்து மொத்தம் 266 மனுக்களைப் பெற்றார்.
பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், மனுதாரர்களின் பிரச்னைகளை புறக்கணிக்கக்கூடாது, நிலுவையில் உள்ள மனுக்களை உடனே தீர்க்க வேண்டும், பெறப்பட்ட மனுக்கள் புறக்கணிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினர்.
இதில் பயிற்சி கலெக்டர் சந்தீப் ரகு வான்சி, சிறப்பு துணை கலெக்டர்கள் தேவேந்தர் ரெட்டி, ரோஸ் மோண்ட் மற்றும் சுதா ராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
