Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் 92 முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 20,335 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

*அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ‘‘உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ‘‘உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை வகிக்க, மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் முன்னிலை வகித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்,திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை -15 முதல் அக்டோபர் 15 வரை நகர்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இதுவரை 92 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 42,168 மனுக்கள் பெறப்பட்டு, 20,335 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை போன்ற 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும்,

ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை போன்ற 15துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க. மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ‘‘உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் இன்று மனு வழங்கியவர்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, ஒரு பயனாளிக்கு சொத்துவரி பெயர் மாற்றமும், ஒரு பயனாளிக்கு பிறப்பு சான்றும், இரண்டு பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையும், மூன்று பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பும். வேளாண்மைத்துறை சார்பில் நான்கு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் செல்வராஜ். துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, ஆர் டி ஓ விஷ்ணுபிரியா, நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.