சென்னை: உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும் என நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார். உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி குறித்த விவகாரத்தில் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. நாம் அனைவரும் மேம்பட்டு கொள்ளும் ஒரு விஷயமாக இந்த விவகாரத்தை பார்ப்போம். உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உருவக் கேலி என்பது நகைச்சுவை என்ற பெயரில் இன்றும் தொடர்கிறது. உருவக் கேலியில் ஈடுபட்டவரை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
+
Advertisement

