சட்டவிரோத சுரங்கம், ரிசார்ட்டுகள் இயங்கவில்லை வீரப்பன் இருந்தபோது காடு நன்றாக இருந்தது: வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் ஆதங்கம்
பெங்களூரு: மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் மனித-வனவிலங்கு மோதலைத் தடுப்பதற்காக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தலைமையில் சாம்ராஜ்நகரில் உள்ள கேடிபி மண்டபத்தில் நேற்று முக்கியமான ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது வீரப்பனை நினைவுகூர்ந்து பேசிய விவசாயிகள், புலிகள் காப்பகத்தில் ஏராளமான சட்டவிரோத ரிசார்ட்டுகள் இயங்கி வருகின்றன. வீரப்பன் இருந்தபோது காடு நன்றாக இருந்தது. சட்டவிரோத சுரங்கம் மற்றும் ரிசார்ட்டுகள் இயங்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
