புதுடெல்லி: கர்நாடக மாநிலம், பெலேகேரியில் உள்ள துறைமுகத்தில் இருந்து சட்ட விரோத இரும்பு தாது ஏற்றுமதி தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், சட்ட விரோத இரும்பு தாது ஏற்றுமதியில் சட்ட விரோத பண மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு, ஹாஸ்பேட் மற்றும் அரியானா குருகிராமில் அமலாக்கத்துறை நேற்று சோதனை மேற்கொண்டது. பெங்களூருவில் 20 இடங்களில் சோதனைகள் நடந்தன. இதில், எம்எஸ்பிஎல் லிமிடெட்(பல்டோட்டா குழுமம்), அர்ஷாத் எக்ஸ்போர்ட்ஸ், சீனிவாசா மினரல்ஸ் டிரேடிங் உள்ளிட்ட நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத் துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement