ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவன கார் ஆலை உள்ளது. இங்கு பேட்டரியால் இயங்கும் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில், அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 475 தென் கொரிய நாட்டினர் சிக்கினர்.
அவர்களை கைவிலங்கிட்டு அதிகாரிகள் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துெசன்றனர். அமெரிக்காவின் நட்பு நாடான தென் கொரியாவின் நிறுவனம் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கள் நாட்டவரை தாய்நாடு திரும்பி அழைத்துவர தென்கொரியா தனி விமானம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது.