டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சட்டவிரோதமாக சரக்குகளை எடுத்துச்சென்ற எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. தலாரா என பெயரிடப்பட்ட அந்த கப்பலானது 30ஆயிரம் டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை எடுத்துச்சென்றது. ஈரான் கப்பல்கள் இடைமறித்தபோது கப்பல் சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் இருந்தது. கைப்பற்றப்பட்ட டேங்கர் கப்பலை கடற்படை அதிகாரிகள் ஈரான் கடற்பகுதிக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
+
Advertisement


