சட்டவிரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை..!!
மதுரை: சட்டவிரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை கோரி மனு அளித்தார். அபராதம் விதிக்கப்பட்டு தொகை கட்டாதவர்கள் மீது வருவாய் மீட்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது என அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


