சென்னை: கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் தொடங்கியது. கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும் என வழிவகுத்தவர் அண்ணா. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும் என்பதை விதைத்தவர் அண்ணா. 10,000 கிராமங்களை ஒன்றிணைத்து முதன்முறையாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
+
Advertisement