திருவனந்தபுரம்: கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு போகும்போதும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி வளைவு நிறைந்ததாகவும் பள்ளத்தாக்கு போன்ற கீழ் இறக்கமான பகுதியாகும். இந்த பகுதியில் பேருந்து அதிவேகம் போனதுனால வளைவு திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஒரு புறத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த 40 பேர்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 10 பேர் குட்டிக்கணத்துவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்துகாண கரணம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதிவேகமாக வந்ததால் பேருந்து கவிழ்ந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த குட்டிக்கணத்தில் இறங்க கூடிய இறக்கமான பகுதியில் எல்லரும் செல்லக்கூடிய வாகனங்கள் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் வாகனம் மிக கவனமா செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 400, 500 அடி பள்ளத்தாக்கு கள் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் மிக ஜாக்கிரதையா வர வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளன.

