சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தபோது பழிவாங்கும் நோக்கி பொன் மாணிக்கவேல் தன் மீது வழக்கு தொடரப்படட்டதாக காதர் பாஷா வழக்கு தொடர்ந்திருந்தார். டிஎஸ்பி காதர் பாஷாவின் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிபிஐ முன்னாள் காவல் அதிகாரி, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிகைக்கு எதிரான மனுவை விசாரித்த ஐகோர்ட், பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை ரத்து செய்தது.
+
Advertisement