மதுரை: மதுரையில் இட்லி கடை பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஆபத்தான முறையில் பேனர் வைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இட்லி கடை பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்காக தனுஷ் ரசிகர்கள், நற்பணி மன்றம் சார்பில் ஆபத்தான முறையில் பேனர் வைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. பேனர் வைத்த புகாரில் தனுஷ் நண்பர்கள் தலைமை நற்பணி மன்ற நிர்வாகி மாரிமுத்து மீது வழக்கு தொடரப்பட்டது.
+
Advertisement