மும்பை: ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தியது. புதிய வாடிக்கையாளர்கள் பெருநகரங்கள்,நகர்புறங்களில் ரூ.50,000, புறநகர் வாடிக்கையாளர்கள் ரூ.25,000, கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வைத்திருக்க வேண்டும் என்று வங்கி அறிவித்தது. மினிமம் பேலன்ஸ் தொகை குறித்த அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில்,குறைந்த பட்ச இருப்பு தொகையை வங்கி நேற்று திடீரென குறைத்துள்ளது. அதன்படி வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,பெருநகரங்கள்,நகர்புற வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500ம், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.