சென்னை : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் டெல்லி புறப்பட்டது. விரைவில் ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, ஹைட்ரஜன் ரயில் இன்று புறப்பட்டு சென்றது. அரியானா மாநிலம் சோனி பட்டில் இருந்து- ஜிந்த் வரை விரைவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது.
+
Advertisement