லண்டன்: ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அப்பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில், 784 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2வது இடத்தில் இருந்த பாக். அதிரடி வீரர் பாபர் அஸம், வெஸ்ட் இண்டீசுடனான போட்டிகளில் சொதப்பியதால் ஒரு நிலை சரிந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதையடுத்து, இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, 2ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
இந்திய வீரர் விராட் கோஹ்லி 4ம் இடத்தில் மாற்றமின்றி தொடர்கிறார். தவிர, நியுசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 5, இலங்கை வீரர் சரித் அஸலங்கா 6, அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டார் 7வது இடங்களில் உள்ளனர். இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 8, ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் ஜாட்ரன் 9, இலங்கை வீரர் குஸால் மெண்டிஸ் 10வது இடங்களில் உள்ளனர்.