ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளியப்படுத்திய ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஐசிசியின் ODI பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
தரவரிசை பட்டியலில் 5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜை பின்னுக்கு தள்ளி 710 புள்ளிகளுடன் ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார். 680 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 659 புள்ளிகளுடன் இலங்கை அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா 3வது இடத்திலும், 654 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி வீரர் ஆர்ச்சர் 4வது இடத்திலும், 650 புள்ளிகளுடன் இந்திய அணி வீரர் குலதீப் யாதவ் 5வது இடத்திலும் உள்ளனர்.616 புள்ளிகளுடன் இந்திய அணி வீரர் ஜடேஜா 10வது இடத்தில உள்ளார்.
இந்திய அணியை சேர்ந்த சேர்ந்த இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளனர். குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா தனது 10வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். முகமது ஷமி 14வது இடத்திலும், அக்சர் படேல் 37வது இடத்திலும் உள்ளனர்.
ODI பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஷுப்மான் கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இந்திய நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 3வது மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் 9வது இடத்தில் உள்ளார்.