Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கிகளில் 5208 புரபேஷனரி ஆபீசர்கள் :ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

பணி: புரபேஷனரி ஆபீசர்கள்/மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் (2026-27).

வங்கிகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:

i) பேங்க் ஆப் பரோடா: 1000 இடங்கள் (பொது-405, ஒபிசி-270, பொருளாதார பிற்பட்டோர்-100, எஸ்சி-150, எஸ்டி-75). இவற்றில் 40 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ii) பேங்க் ஆப் இந்தியா: 700 இடங்கள் (பொது-283, ஒபிசி-189, பொருளாதார பிற்பட்டோர்-70, எஸ்சி-105, எஸ்டி-53). இவற்றில் 28 இடங்கள் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

iii) பேங்க் ஆப் மகாராஷ்டிரா: 1000 இடங்கள் (பொது-405, ஒபிசி-270, பொருளாதார பிற்பட்டோர்-100, எஸ்சி-150, எஸ்டி-75). இவற்றில் 40 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

iv) கனரா வங்கி: 1000 இடங்கள் (பொது-500, ஒபிசி-200, பொருளாதார பிற்பட்டோர்-100, எஸ்சி-150, எஸ்டி-50). இவற்றில் 40 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

v) சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா: 500 இடங்கள் (பொது-203, ஒபிசி-135, பொருளாதார பிற்பட்டோர்-50, எஸ்சி-75, எஸ்டி-37) இவற்றில் 20 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

vi) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 450 இடங்கள் (பொது-183, ஒபிசி-121, பொருளாதார பிற்பட்டோர்-44, எஸ்சி-69, எஸ்டி-33). இவற்றில் 22 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

vii) பஞ்சாப் நேஷனல் வங்கி: 200 இடங்கள் (பொது-81, ஒபிசி-54, பொருளாதார பிற்பட்டோர்- 20, எஸ்சி-30, எஸ்டி- 15). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

viii) பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி: 358 இடங்கள் (பொது-144, ஒபிசி-98, பொருளாதார பிற்பட்டோர்-36, எஸ்சி-53, எஸ்டி-27)). இவற்றில் 33 இடங்கள் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வயது: 21.07.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.850/-. (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஐபிபிஎஸ் அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

பிரிலிமினரி எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், புதுச்சேரி, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மையங்களில் நடைபெறும்.

ஆன்லைன் மெயின் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி, வேலூர், விருதுநகர், கோவை, நாமக்கல் ஆகிய மையங்களில் நடைபெறும்.

www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2025.