சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு வருமாறு: பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு சிறப்பு செயலாளர் சஜ்ஜன் சிங் ராவ் சவான் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பால சுப்பிரமணியன், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு செயலாளராகவும்,
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை செயலாளர் ஸ்ரீவெங்கட பிரியா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும், சமூக நல இயக்குநரக கூடுதல் இயக்குநராக சரண்யா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன செயல் அலுவலராக ஸ்வேதா சுமன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பிரியங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பானோத் ம்ருகேந்தர் லால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.