சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின்கீழ் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட, அதன்மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவது ஓர் அங்கமாகும்.
இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் உரிய கட்டமைப்பை பெற்றிருக்கின்றனவா என்பதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, எந்தெந்த துறைகளில் பயிற்சி அளித்தால் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற முடியும் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.