ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், எக்ஸ்டர் எஸ்யுவியை அறிமுகம் செய்து ஓராண்டு நிறைவையொட்டி, எக்ஸ்டர் நைட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது, எக்ஸ்டர் டாப் வேரியண்ட்களான எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. எக்ஸ்டர் வேரியண்ட்களில் சிஎன்ஜி வேரியண்ட் விருப்பத் தேர்வாக கிடைக்கும். ஆனால், நைட் எடிஷனில் சிஎன்ஜி இல்லை. கார் ஜன்னல் மற்றும் கதவின் உட்புற விளிம்புகளில் கருப்பு நிற பெயிண்ட், முன்புற பம்பர் மற்றும் டெயில் கேட்கள், முன்புற பிரேக்குகளில் சிவப்பு நிறம், கருப்பு நிறத்தில் அலாய் வீல்கள், ஹூண்டாய் லோகோ மற்றும் எக்ஸ்டர் நைட் எம்ப்ளம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. காரின் உட்புறத்திலும் கருப்பு மற்றும் சிவப்பு பார்டரில் சீட்கள், ஸ்டியரிங் வீல்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன. 5 மோனோ டோன் மற்றும் 2 டூயல் கலர் தேர்வுகளில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலையாக எக்ஸ்டர் நைட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் எஸ்எக்ஸ் வேரியண்ட் சுமார் ரூ.8.62 லட்சம் எனவும், டாப் வேரியண்டான எக்ஸ்டர் நைட் ஏஎம்டி எஸ்எக்ஸ் ஓ கனெக்ட் டூயல் டோன் சுமார் ரூ.10.43 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement


