Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐதராபாத்காரரின் அசத்தல் பயணம் 1,638 கிரெடிட் கார்டுகளுடன் கின்னஸ் சாதனை: கேஷ்பேக், ரிவார்டு பாயின்ட்சில் ஓடுது வாழ்க்கை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மணிஷ் தமேஜா, புத்திசாலித்தனமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, அதில் கிடைக்கும் பரிசுகள், கேஷ்பேக்குகளை சரியாக பயன்படுத்தி ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். தமேஜாவிடம் செயல்பாட்டில் 1,638 கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. இந்த சாதனையை அவர் 2021ல் படைத்தாலும் இப்போதும் அவரைப்பற்றி சமூக ஊடகத்தில் பலரும் தேடிப்பிடித்து படித்து வருகின்றனர்.

இது குறித்து மணிஷ் தமேஜா கூறுகையில், ‘‘கிரெடிட் கார்டுகள் இல்லாமல் எனது வாழ்க்கை முழுமையடையாது. கடந்த 2020ல் பணமதிப்பிழப்பு என் வாழ்க்கையை மாற்றி விட்டது. அப்போது எல்லோரும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வங்கியில் தவம் கிடந்து கஷ்டப்பட்டனர். ஆனால் நான் என் கிரெடிட் கார்டு மூலம் எந்த சிரமமும் இல்லாமல் பணத்தை செலவழித்தேன். அதற்கு பில்களையும் எளிதாக கட்டினேன்.

டிஜிட்டல் முறைக்கு மாறியதும் அதிகளவில் கிரெடிட் கார்டுகளை வாங்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கார்டுக்கும் ஒவ்வொரு நன்மைகள் உள்ளன. அதன்படி கேஷ்பேக், விமான நிலையம், ரயில் நிலையம் தங்கும் அறைகள், விமான இலவச டிக்கெட், பரிசுப் பொருட்கள் என கிரெடிட் கார்டுகள் வழங்கும் அத்தனை நன்மைகளையும் முறையாக பயன்படுத்திக் கொண்டேன்.

கிரெடிட் கார்டுகளை அதன் சலுகைக்கு ஏற்றபடி பிரித்து பயன்படுத்துவேன். அதில் நிறைய பலன்கள் கிடைப்பதால் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை’’ என்றார்.தொழில்நுட்பத்தையும், நிதியையும் புத்திச்சாலித்தனமாக திட்டமிட்டால் மிகவும் சாதாரண விஷயங்களை கூட அசாதாரணமாக்கி விடலாம் என்பதை தனது வாழ்க்கை மூலம் செய்து காட்டி உள்ளார் மணிஷ் தமேஜா.