புதுடெல்லி: கால்பந்து விளையாட்டை கொண்டாடும் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடுகளுக்கு, அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) கோட் டூர் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவுக்கும் அவர் வருகை தரவுள்ளார்.
அடுத்த மாதம் இந்தியா வரும் மெஸ்ஸி, கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் உள்ள கொல்கத்தா நகருக்கு சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, மும்பை, டெல்லி நகரங்களுக்கு செல்ல மெஸ்ஸி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அவரது சுற்றுப்பயணத்தில் ஐதராபாத் நகரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, சமூக வலைதளத்தில் மெஸ்ஸி நேற்று உறுதி செய்தார்.

