Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹைதராபாத் ஆயுத தொழிற்சாலையில் 68 இடங்கள்

தெலங்கானா மாநிலம், சங்கர்ரெட்டி மாவட்டத்தில், எடுமயிலரத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் டெக்னீசியன் (வெல்டர்): 5 இடங்கள் (பொது-12, ஒபிசி-1)

2. ஜூனியர் டெக்னீசியன் (மிஷினிஸ்ட்): 19 இடங்கள் (பொது-11, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-1). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர் எலக்ட்ரிக்): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1)

4. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர் ஜெனரல்): 10 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

5. ஜூனியர் டெக்னீசியன் (மில் ரைட்): 9 இடங்கள் (பொது- 6, ஒபிசி-2, எஸ்சி-1).

6. டிப்ளமோ டெக்னீசியன் (சிஎன்சி ஆபரேட்டர்): 10 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1).

7. ஜூனியர் டெக்னீசியன் (மில்லர்): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

8. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர் ஜெனரல்): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1).

மொத்தம் உள்ள 68 இடங்களில் 6 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, வயது, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://ddpdoo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.08.2025.