Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கணவன் இருக்கும்போதே வீடு புகுந்து மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசம்: தர்மஅடி கொடுத்ததால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

குளச்சல்: குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர், தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உண்டு. கணவர் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் மனைவி, வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் தெரிய வந்ததும், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இந்த பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் 2 பேரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர். மகள் மீனவர் அறையில் படுத்திருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்டு கணவர் கண் விழித்தார். மனைவி கோபத்துடன் சென்று தனி அறையில் தூங்கியதால், ஏதாவது விபரீத முடிவு எடுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் அவர் அந்த அறை கதவை திறந்து பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் வீட்டில் இருக்கும் போதே கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த மீனவர், ஆத்திரத்தில் 2 பேரையும் சரமாரியாக அடித்தார். கள்ளக்காதலனுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு பொதுமக்களும் திரண்டனர். அப்போது திடீரென கள்ளக்காதலன் டேபிளில் இருந்த பிளேடை எடுத்து, தனக்கு தானே கழுத்தை அறுத்தார். இதையடுத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.