நெல்லை: நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். வக்பு நிலம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி பிஜிலி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை மிரட்டல் விடுப்பதாக கொலையான எஸ்ஐ மனைவி அஜி ஜூன்னிஷா (53) பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என் மகன் பள்ளிவாசலுக்குப் போகும்போது, ‘உன் அப்பாவை செய்த மாதிரி உன்னையும் செய்ய போகிறேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் வெளியே சுற்றுகிறார்கள். இந்தக்கொலைக்கு முக்கிய காரணமே நூர்நிஷா வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கிறார். இப்போது எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் வருகிறது. தயவுசெய்து முதலமைச்சர் தான் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, ஒரு நியாயம் கிடைக்கச்செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
