டெல்லி: கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதும் சித்ரவதைதான் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவருடன் சேர்ந்து வாழாமல் கணவர், அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறுவது துன்புறுத்தலாகும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கணவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுப்பதை தீவிர துன்புறுத்தலாக கருதவேண்டும் எனவும் கூறியுள்ளது. கணவர் விவாகரத்து கேட்ட பிறகே பல குற்றச்சாட்டு கூறி கணவர் மீது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்து மனு விசாரணையில் உள்ளபோது, புகார் கூறி மனைவி வழக்கு தொடர்வதை நம்ப முடியாது என கூறிய நீதிமன்றம் கணவருடன் வசிக்காமல், தாம்பத்யத்தில் ஈடுபடாததால் கணவருக்கு விவாகரத்து வழங்கியது. மேலும் மகனுடன் தந்தையை நெருங்க விடாமல் திட்டமிட்டு மனைவி தடுப்பதும் துன்புறுத்தலே. கணவன், மனைவி தகராறில் குழந்தையை பகடைக்காயாக்குவது குழந்தை மனநிலையை பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.
+
Advertisement