ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் வென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் திங்கட் கிழமை தொடங்கி அறிவிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசானது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் இந்த பரிசை வென்றிருந்தார். இதுவரை மொத்தம் 117 முறை 121 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அவ்வப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகின்றார். இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
+
Advertisement