சென்னை: சென்னையில் வரும் 10ம் தேதி மனிதநேய விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 31ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மனிதநேய விருது வழங்கும் விழா வரும் 10ம் தேதி (புதன்கிமை) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது. விழாவிற்கு தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகிக்கிறார்.
விழாவில் சமூக நல்லிணக்கத்திற்கான மனிதநேய விருது- பாலபிரஜாபதி அடிகளாருக்கு வழங்கப்படுகிறது. மனித உரிமை காப்பாளருக்கான மனிதநேய விருது- வழக்கறிஞர் ஹென்றி திபேன், கல்வி பணிக்கான மனிதநேய விருது- பேர்ணாம்பேட்டை பொறியாளர் பி.கே.சபீர் அகமது, ஊடக பணிக்கான மனிதநேய விருது- ஊடகவியலாளர் வீரபாண்டியன், சுற்றுச்சூழல் காப்பாளருக்கான மனிதநேய விருது- பேராசிரியர் ஜெயராமனுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.