இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில், நீதிமன்றத்தின் அருகே காவல்துறையின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினார்.
இதில் அந்த நபர் வெடித்து சிதறி உயிரிழந்தார். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார்அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தனிநபரோ, அமைப்போ பொறுப்பேற்கவில்லை. தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
