திருவனந்தபுரம்: தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மதுபான பாரில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு தரப்பினரும் சுமுகமாக பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டதால் முன் ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement