ஹெச்பிவி தடுப்பூசி மலிவான விலையில் கிடைக்க வழிவகை: விடால் ஹெல்த் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா
மும்பை/புனே: நோய்த்தடுப்பு மற்றும் டிஜிட்டல் செயல்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் சுகாதாரப் பராமரிப்பு என்ற இலக்கை நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மூன்றாம் தரப்பு நிர்வாகச்சேவை (TPA) வழங்குநரான விடால் ஹெல்த் (Vidal Health) மற்றும் சைரஸ் பூனாவாலா குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்படும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India (SII) Pvt. Ltd) பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான தேசிய முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஒரு முக்கியமான கூட்டாண்மையை இன்று அறிவித்துள்ளன.
அக்டோபர் 1, 2025 முதல், விடால் ஹெல்த் தளம் HPV தடுப்பூசிக்காக ஒரு முழுமையான, சௌகரியமான மற்றும் பணமில்லாத சேவை அனுபவத்தை வழங்கும்; இந்த வகையில் இச்சேவையை வழங்கும் முதல் தளமாக இது விளங்கும். விரும்பிய இடத்தில் மருத்துவரை சந்திக்க டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்வதில் இருந்து, ஒப்புதல் அளிப்பது மற்றும் சான்றிதழ் பெறுவது வரை அனைத்தும் காகிதப் பயன்பாடின்றி மேற்கொள்ளப்படும். முழுமையாக நிர்வகிக்கப்படும் இந்த சுகாதாரத் திட்டம், சரியான நேரத்தில் மருந்தளிப்பு குறித்து நினைவூட்டல்கள், தடுப்பூசி அட்டவணையை முறையாகப் பின்பற்றுவதைக் கண்காணித்தல் மற்றும் சிகிச்சையின் தொடர்ச்சியை உறுதி செய்ய திறமையான வலையமைப்பு மேலாண்மை ஆகியவற்றுடன் முழுமையான ஆதரவை வழங்கும்.
விடால் ஹெல்த், பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் (Bajaj Finserv Health) நிறுவனத்திற்கு 100% சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த், சிதறிய நிலையில் இருக்கும் சுகாதார வழங்கல் அமைப்பை ஒன்றிணைத்து, வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைப் பராமரிப்பு மற்றும் டெலிமெடிசின் உட்பட, நோய்த்தடுப்பு முதல் ப்ரீபெய்டு சுகாதாரம் வரையிலான திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு டிஜிட்டல் தளமாகும். பஜாஜ் ஃபின்சர்வ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், "இந்தியாவில் சுகாதாரத்துறை, நோய் ஏற்பட்டபின் சிகிச்சை அளிக்கும் முறையில் இருந்து, விழிப்புணர்வு மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மாற்றத்தை உருவாக்கும் திட்டங்களால், நோய் வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு என்ற இலக்குடன் ஒரு அடிப்படை மாற்றத்தை தற்போது அடைந்து வருகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் நிறுவனத்தில், நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மையமாகக் கொண்டு, மக்கள் உடல்நலத்துடன் வாழ திறனளிக்கும் ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதன் மூலம் இந்த மாற்றத்தை நாங்கள் சாத்தியமாக்குகிறோம். சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடனான எங்கள் ஒத்துழைப்பு நடவடிக்கை, எமது தடுப்பூசி திட்டத்திற்கு ஒரு வலுவான தொடக்கத்தை வழங்குகிறது. தனிநபர்களும் மற்றும் பெருநிறுவனங்களின் பணியாளர்களும் தங்களது ஆரோக்கியத்தை முனைப்புடன் நிர்வகிக்க டிஜிட்டல் வசதியை அளிப்பதன் மூலம், அவர்களின் நீண்டகால சுகாதாரச் செலவுகளைக் குறைக்க நாங்கள் உதவுகிறோம்; அதே வேளையில், நமது நாட்டின் நிலைத்தன்மையுள்ள நலவாழ்விற்கும் பங்களிக்கிறோம்." என்று கூறினார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறுகையில், "கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதில் ஹெச்பிவி தடுப்பூசி ஒரு முக்கிய முன்னெடுப்பாகும். ஆனால் அதனால் முழுமையான, விரிவான தாக்கம் ஏற்படுவதற்கு நாடெங்கிலும் அது எளிதாக கிடைக்கும் வசதியும், விழிப்புணர்வும் அவசியம். விடால் ஹெல்த் உடனான எங்கள் ஒத்துழைப்பு முயற்சியானது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசியை மிகவும் திறமையாகவும் பெரிய அளவிலும் விநியோகிப்பதன் மூலம் அந்த இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. இந்த முயற்சி, அத்தியாவசியத் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும், பொது சுகாதார மேம்பாட்டிற்கும் நாங்கள் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.” என்று கூறினார்.
விடால் ஹெல்த்கேர் சர்வீசஸ் லிமிடெட் - ன் முழுநேர இயக்குநர் நீத்தா உத்தையா பேசுகையில், "சுகாதாரப் பராமரிப்பை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எளிதில் பெறக்கூடியதாகவும் மாற்றும் எங்கள் பயணத்தில் சீரம் இன்ஸ்டிடியூட்டுடனான இந்த ஒத்துழைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது. எங்களது தற்போதைய திறன்மிக்க காப்பீட்டு உரிமைகோரல் (கிளைம்) செயலாக்கம் மற்றும் பிற நலவாழ்வு திட்டங்களுடன், வெளிப்படையான முறையில் நோய் வராமல் தடுப்பதற்கான சுகாதாரப் பராமரிப்பை வழங்க இது எங்களுக்கு உதவுகிறது. முழுமையாக நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்க்கைகளையும், இந்தியாவில் நோயாளிகளின் குடும்பத்தினர் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து அல்லது கடன் வாங்கி செய்கின்ற மருத்துவச் செலவுகளை குறைப்பதும் எமது நோக்கமாகும். இதன்மூலம் நம் நாட்டில், றசுகாதாரப் பராமரிப்புச் சூழலை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார்.
இந்த முயற்சி, சுகாதார சேவை வழங்குநர்கள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் ஆரோக்கிய சேது போன்ற தேசிய டிஜிட்டல் தளங்களை ஒன்றிணைத்து ஒரு வலுவான, இணைக்கப்பட்ட சுகாதார அமைப்பை உருவாக்குவதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இது தனிநபர்களுக்கான விடால் ஹெல்த் நிறுவனத்தின் தடுப்பு சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் எல்லையை விரிவுபடுத்துகிறது. விடால் ஹெல்த் டிஜிட்டல் தளம் தற்போது மருத்துவர்களுடன் ஆலோசனைகள், நோய் பாதிப்புகளை கண்டறியும் சோதனைகள், உடல்நலப் பரிசோதனைகள், நலவாழ்வு திட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு நிதி உதவியைப் பெறும் விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது.
உயர்தரத்திலான ஹெச்பிவி தடுப்பூசி, இடைத்தரகர்கள் அல்லது தாமதங்கள் இன்றி , விடால் ஹெல்த் டிஜிட்டல் தளத்தில் நேரடியாகப் பயனாளிகளுக்கு கிடைக்கும். இந்தத் தளம், டிஜிட்டல் முன்பதிவு, பணமில்லா பரிவர்த்தனை மற்றும் பல-டோஸ் தடுப்பூசி அட்டவணையைத் தானாகக் கண்காணித்தல் போன்ற வசதிகளை வழங்குகிறது. பெருநிறுவன ஊழியர்கள், தங்கள் பணியிடங்களிலோ அல்லது விடால் ஹெல்த் உடன் கூட்டாண்மையை மேற்கொண்டிருக்கின்ற மருத்துவமனைகளிலோ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதியைப் பெறலாம். அனைத்துப் பயனர்களிடையேயும் வெளிப்படைத்தன்மையையும், தடுப்பூசி போட்டுக்கொள்வதை விரும்பி செய்வதை ஏற்பையும் அதிகரிக்கும் வகையில், இந்த சுகாதாரத் திட்டம் மலிவான எளிய கட்டணத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.