ஜிஎஸ்டி மறுசீரமைப்பை தொடர்ந்து டூவீலர்கள் விலையும் குறைந்துள்ளது. யமஹா மோட்டார் நிறுவனம் ஆர்15 பைக் விலையை ரூ.17,581 குறைத்து ரூ.1,94,439 ஆக நிர்ணயித்துள்ளது. இதுபோல் எம்டி 15 ரூ.1,65,536 (குறைக்கப்பட்டது ரூ.14,964), எப்இசட் எப்ஐ ஹைபிரிட் ரூ.1,33,159 (ரூ.12,031 ), ஏரோக்ஸ் 155 எஸ் ரூ.1,41,137 (ரூ.12,753), ரே இசட் ஆர் ரூ.86,001 (ரூ.7,759), பேசினோ ரூ.94,281 (ரூ.8,509) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டார் சைக்கிள் முழு வரி பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி ரூ.15,743 வரை விலை குறையும். குறைந்த பட்சம் எச்எப் டீலக்ஸ் ரூ.5,805 வரையிலும், கிளாமர் எக்ஸ் ரூ.7,813 வரை, பேஷன் பிளஸ் ரூ.6,500, ஸ்பிளண்டர் பிளஸ் ரூ.6,820, எக்ஸ்ட்ரீம் 125 ஆர் ரூ.8,010, எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி ரூ.10,985, எக்ஸ்ட்ரீம் 250ஆர் ரூ.14,055 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா ஆக்டிவா 110 ரூ.7,874, டியோ 110 ரூ.7,157, ஆக்டிவா 125 ரூ.8,259, ஷைன் 100 ரூ.5,672, லிவோ 110 ரூ.7,165, யூனிகார்ட் ரூ.9,948, ஹார்னெட் ரூ.13,026 வரை குறைய வாய்ப்பு உள்ளது.
இதுபோல், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சார் 125 ரூ.8,565, பிளாட்டினா 110 ரூ.5,551 வரையிலும், டிவிஎஸ் ரைடர் 125 ரூ.8,000 வரையிலும் விலை குறையும். ராயல் என்பீல்டு ரூ.22,000 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.