Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் முனிஸ்வர் நகர், வ.உ.சி. நகர், நியூ ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ சந்திப்பு பகுதியை தந்தை பெரியார் சதுக்கம் என மாற்ற அனுமதி

சென்னை: ஓசூர் முனிஸ்வர் நகர், வ.உ.சி. நகர், நியூ ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ சந்திப்பு பகுதியை தந்தை பெரியார் சதுக்கம் என மாற்ற அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்கள். பேருந்து நிலையங்களுக்கு பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2. ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உள்வட்ட சாலையில் இணையும் பகுதிகளான முனிஸ்வர் நகர். வ.உ.சி. நகர், நியூ எ.எஸ்.டி.சி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அப்பகுதிக்கு தமிழில் "தந்தை பெரியார் சதுக்கம்" எனவும் ஆங்கிலத்தில் "தந்தை பெரியார் ஸ்கொயர்"

(Thanthai Periyar Square) எனவும் பெயர் சூட்ட ஓசூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட அனுமதி வழங்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசை கோரியதன் அடிப்படையில், மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசு கடிதத்தில் அரசாணை (நிலை) எண்.98, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 11.07.2022-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின் படி மேற்காணும் பொருள் குறித்த தீர்மானத்தை ஓசூர் மாநகராட்சி மாமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டது.

3. அதனடிப்படையில், ஓசூர் மாநகராட்சி மாமன்றம் தீர்மானம் எண்.260, நாள் 28.07.2023-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உள்வட்ட சாலையில் இணையும் பகுதிகளான முனிஸ்வர் நகர். வ.உ.சி. நகர், நியூ எ.எஸ்.டி.சி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அப்பகுதிக்கு தமிழில் "தந்தை பெரியார் சதுக்கம்* எனவும் ஆங்கிலத்தில் "Thanthai Periyar Square" எனவும், பெயர் சூட்ட கோரிய ஓசூர் மாநகராட்சி ஆணையரின் செயற்குறிப்பின் மீது தக்க ஆணை பிறப்பிக்குமாறு பார்வை நான்கில் காணும் கடிதத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

4. நகராட்சி நிர்வாக இயக்குநரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, பரிசீலனைக்குப் பின்பு அதனை ஏற்று, ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உள்வட்ட சாலையில் இணையும் பகுதிகளான முனிஸ்வர் நகர். வ.உ.சி. நகர், நியூ எ.எஸ்.டி.சி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அப்பகுதிக்கு தமிழில் "தந்தை பெரியார் சதுக்கம்" எனவும் ஆங்கிலத்தில் "Thanthi Periyar Square" எனவும் பெயர் சூட்ட நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.