ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திருநெல்வேலியை சேர்ந்த சாம் கணேஷ் (63) என்பவர் காப்பகம் நடத்தி வருகிறார். அந்த வளாகத்திற்குள்ளேயே, துவக்கப்பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. இங்கு ஆண், பெண் என 33 பேர் தங்கி உள்ளனர். தாளாளர் சாம் கணேசுக்கு துணையாக மனைவி ஜோஸ்பின் (61) பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இங்கு 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு தாளாளர் சாம் கணேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தாளாளர் சாம் கணேஷ், அவருக்கு உதவியாக இருந்து குற்றத்தை மறைக்க முயற்சி மேற்கொண்ட மனைவி ஜோஸ்பின் (61), ஓசூரை சேர்ந்த நாதா முரளி (37), செல்வராஜ் (63), ஆசிரியை இந்திரா (36) ஆகிய 5 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.